₿ பிட்காயின் என்றால் என்ன ?|| BITCOIN IN TAMIL
WHAT IS BITCOIN & CRYPTOCURRENCY EXPLAINED IN TAMIL
இந்த பதிவில் கிரிப்டோகிரணசியில் ஒன்றான பிட்காயின் பற்றி பார்க்கலாம்!
யார் உருவாக்கினார்?
2008 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த Satoshi Nakamoto என்பவரால் உலகின் முதல் கிரிப்டோ கரன்சி என ₿ பிட்காயின் அறிவிக்கப்பட்டது.
பிட்காய்ன் என்ற வார்த்தை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம் . Bitcoin இந்த வார்த்தை உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம் அனால் இதை புரிந்துகொள்வது மிக எளிமை .அதற்கு முன் Cryptocurrency என்றல் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். அதாவது Currency நமக்கு தெரியும் - ரூபாய் நோட்டு இதை நாம் கண்ணால் பார்க்கமுடியும். அதேபோல் கிரிப்டோகிரணசிஐ கண்ணால் பார்க்க முடியாத ஒரு ரூபா நோட்டு என நாம் எடுத்துக்கொள்ளலாம் ( நாம நேரடியா பார்க்க முடியாது என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்). இது ஒரு டிஜிட்டல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் இதற்கு ஒரு உதாரணம் பணம் எவ்வாறு உருவானது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் போதும் நமது முன்னோர்கள் காலத்தில் ரூபாய் நோட்டெல்லாம் கிடையாது . பண்டமாற்று முறை (Commodity Exchange) பண்டமாற்று என்றால் தன்னிடம் இறக்கும் ஒரு பொருளை மற்றவர்களிடம் கொடுத்து தனக்கு தேவையான பொருட்களை வாங்குவது. இதில் எந்தவித பண ஈடுபாடும் இல்லை கைமாற்றப்படும் பொருள் காய்கறியாக இருக்கலாம், தானியங்கள்யாக இருக்கலாம், தங்கமாக இருக்கலாம். பிற்காலத்தில் இதற்கு ஏதாவது ஒரு அளவுகோல் தேவை என முடிவு செய்தார்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என நினைத்தார்கள். பின்னர் தங்கக்காசு, தங்கக்கட்டி என மாற்றங்கள் செய்து வந்தார்கள் பிறகு வந்ததுதான் நாணயங்கள் பின்னர் பேப்பர் கரன்சி எனப்படும் ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தார்கள் இதற்குப் பிறகு வந்த தான் காசோலை அதாவது (Checkbook ) அனால் வங்கிகள் மூலம் நாம் பணத்தை எடுத்தாலோ , அனுப்பினாலோ அதற்கென ஒரு கமிசன் நம் கணக்கில் இருந்து எடுக்கப்படும் அதேபோல் நாம் வைத்திருக்கும் பணத்தின் அளவு மற்றும் வரவு செலவு ஆகிய அனைத்து தகவல்களும் வங்கிகளிடம் இறக்கும். வங்கி கமிஷன் தொல்லை தாங்காத தொழில்நுட்பம் அறிந்த சிலர் நமக்குதான் தொழில்நுட்ப தெரியுமே எதற்காக இந்த வங்கி சிஸ்டம் உள்ள போய் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும் நமக்கென ஒரு சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் அங்கு யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை யாருக்கும் வரியும் கொடுக்க தேவையில்லை என முடிவெடுத்தார்கள். இப்படித்தான் கிரிப்டோகரன்சி உருவானது அரசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது இது தனியார் தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரப்பட்டது. RBI வாங்கிகுக்கிள் வர விரும்பாதவர்கள் இதை கம்ப்யூட்டரில் உருவாக்கினார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு டிஜிட்டல் காசு, அரசாங்கமும் கண்டறிய முடியாது, கமிஷன் வரி கட்டத் தேவையில்லைஅரசாங்கத்தின் அங்கீகாரம்மும் உத்தரவாதமும் இதற்கு கிடையாது இருபினும் சில நாடுகள் இதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் இன்றைய மதிப்பு:-
1₿ ≈ ₹ 23,67,188.96 [IND]
1₿ ≈ $ 31,610.10 [US]
இந்தியாவில் ₿ பிட்காயின் வாங்கலாமா?
இப்போது இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோதமானவை அல்ல, ஆனால் அவை ஒழுங்குபடுத்தப்படவில்லை. நீங்கள் BITCOINஐ வாங்கலாம் விற்கலாம் அனால் அவற்றை பாதுகாப்பது உங்கள் வேலை. அதற்கும் அரசிற்கும் எந்தவித சம்மதமும் இல்லை.
இந்தியா அரசின் நிலைப்பாடு :-
தனியார் கிரிப்டோகரன்சிகு அனுமதி தரும் எண்ணம் இல்லை இது தொடர்பான மசோதா ஒன்று விரைவில் மத்திய கேபினட்இல் ஒப்புதல் வாங்கின பிறகு நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்களும் படித்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து பயன்பெறுங்கள் .உங்கள் கருத்துக்களை Comment செய்யவும் .
நன்றி !
BIT COIN IN TAMIL


