BUSINESS STORY IN TAMIL - பிசினஸ் பற்றி ஓர் சிறிய தமிழ் கதை

SHORT TAMIL STORY ON BUSINESS TACTICS

Tamil Business ideas

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் அந்த இரண்டு பேருக்குமே ஒரு தொழிலதிபர் அதாவது ஒரு தொழில் தொடங்கி அதில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.  இதில் ஒரு நண்பனின்  Business Tactics  அதாவது தொழில் தந்திரம் என்னவென்றால்  குறைந்த  விலைக்கு பொருள் வாங்கி அதை  அதிகமான விலைக்கு விற்பது. அதேபோல் கம்மியான விலைக்கு நிறைய பொருட்களை வாங்கி  அவனுடைய கடையில் விற்பனைக்கும் வைத்தான். அவன் கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் விலையை கேட்டதும் வியந்தனர் . ஏனென்றால் அவன் வாங்கிய விலையை விட 3  மடங்கு அதிக விலைக்கு விற்றான். இதன் காரணமாகவே அந்த ஊரில்  இருக்கின்ற  10%  மக்கள் மட்டுமே  அதாவது பணக்காரர்கள்  மட்டும்மே அவன் கடைக்கும் வந்தனர்.இருபினும் நஷ்டம் ஏதும் இல்லாமல் நல்ல லாபத்தில் தன் போய்க்கொண்டு இருந்தது ஏனென்றால் அந்த ஊரில் இவன் கடையில் மட்டும் அதிக ரக பொருட்கள் இருந்தன.

மற்றொரு நண்பனோ இரண்டு வருடம் காலம் ஒரு வியாபாரி கடையில் வேலை செய்து வந்தான். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவன் பணம் சம்பாதிக்க வேலை செய்யவில்லை அனுபவத்திற்காக வேலை செய்து வந்தான். தேவையான அனுபவம் கிடைத்ததும் தனது நண்பன் செய்த அதே தொழிலை செய்ய முடிவு செய்தான் சிறிது விதயசமாக யோசித்து தன் கடையில் எல்லாப்பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்  என முடிவுசெய்தான். தனது அனுபவத்தை வைத்து குறைந்த விலைக்கு எங்கு பொருட்கள் கிடைக்கும் என சிந்தித்தான் பின்னர் அவன் நண்பன் வாங்கியதை விட குறைந்த விலைக்கு பொருட்களையும் வாங்கினான். இதற்கு பின்னர் என்ன நடந்திருக்கும் என நீங்கள் கணித்திருப்பீர்கள். ஆம் ஏழைகள் முதல் நடுத்தர மக்கள் வரை பொருட்களை வாங்க குவித்தனர் .அவன் நண்பனுக்கு கிடைத்ததை விட அதிக லாபம் கிடைத்தது.

இக்கதையின் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,

▶ ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் அதில் சிறிதளவு அனுபவம் தேவை. 

▶ மாறுபட்ட சிந்தனை. 

▶ அனைவரிடத்திலும்  நம் பொருள் சென்றுசேர வேண்டும்.

▶ பொறுமையை பெருமை💯


இந்த பதிவு பிடித்திருந்தால் சொந்தத்தொழில் செய்ய விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் உங்கள் கருத்துக்களை Comment செய்யவும் 

கதை தமிழ்

நன்றி!


You may like these posts

.Amazon Prime Music bounty
;