SUCCESS STORY OF Warren Buffett in tamil- வாரன் பபெட்யின் வெற்றிக்கதை.

  Life Story of Warren Buffett tamil 

warren buffett life story in tamil


பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார்  :-

பங்குச்சந்தை என்று  சொன்னாலே சூதாட்டம்  என்று பலர்  ஒதுங்கிய காலம் அனால்  இது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு என்று கூறி அதை   நிரூபித்து காட்டியவர் வாரன் பபெட் பங்குச்சந்தையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இவர் ஒரு ரோல்மாடல் என்று கூறலாம்.  பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய வாரன் பபெட் அவர்களுடைய வரலாறை  இந்த இந்த பதிவில் காணலாம்.

பிறப்பு , இளமைப்பருவம்:- 

வாரன் பபெட் அவர்கள் 1930 ஆவது ஆண்டு அமெரிக்காவில் இருக்கக்கூடிய Omaha என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை சொந்தமா பங்குச் சந்தை முதலீடு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் Rose Hill Elementary School இல்   தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தார்.  சிறு வயதிலிருந்தே மிகப் பெரிய பிசினஸ் மேன் ஆகவேண்டும்  நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற  எண்ணம் அவருக்கு இருந்தது. தனது  7  வயதில் வீடு வீடாக சென்று கொக்கக் கோலா பாட்டில் விற்பது , பத்திரிகை விற்பது என    நிறைய வேலைகளை செய்து வந்தார்.  அதன் மூலம் கிடைக்கும்  வருமானங்களை சேமித்து வைத்தார்.  அது மட்டும்இன்றி  வார விடுமுறை நாட்களில் தன்னுடைய தந்தை நடத்திவரும் ஷேர் மார்க்கெட் கம்பெனியில வேலை செய்துவந்தார் . அந்த சூழ்நிலையில் தான் பங்குச்சந்தை பற்றிய நிலவரங்கள் மற்றும் அதை  சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்  என ஆசைப்பட்டார். warren buffett tamil

கடின உழைப்பு:-

தன்னுடைய 19  வது வயதில் முதன்முதலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்  அதற்கு பிறகு பங்குச் சந்தை மூலம் அதிகம் சம்பாதித்தார்.  தன்னுடைய 14 ஆவது  வயதில் $1200 மதிப்புள்ள ஒரு நிலத்தை வாங்கினார். அதை விவசாயத்திற்கு   குத்தகைக்கு விட்டு சம்பாதிக்க ஆரம்பித்தார். 1945ஆம் ஆண்டு  தன்னுடைய நண்பரோடு சேர்ந்து 25 டாலருக்கு ஒரு  Pinball  இயந்திரத்தை வாங்கி பக்கத்தில் இருக்கக்கூடிய ஓர் முடிதிருத்தும்  நிலையத்தில் வைத்து  அதன் மூலம் நல்ல லாபம் சம்பாதித்தார். பள்ளிப் படிப்பை முடித்ததுமே முழுநேரம் பிசினஸ் செய்ய ஆசை பட்டர்  ஆனால்  இவர் தந்தை  மேற்படிப்பு படிக்க வற்புறுத்தினர். Tamil warren buffett

கல்லுரி வாழ்கை:-

1947ஆம் ஆண்டு வாரன் பபெட்டவர்கள்  University of Pennsylvaniaவில்   கல்லூரி வாழ்க்கையை தொடங்கினர்.  University of Nebraskaவில்  இளங்கலை பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு Columbia Business Schoolஇல்    சேர்ந்து எக்னாமிக்ஸ்இல்  முதுகலை பட்டம் பெற்றார்.  இவருடைய கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊரான  மகாவுக்கு திரும்பினார்  அங்கு  பங்குச்சந்தை இடைத்தரகராக வேலை செய்ய ஆரம்பித்தார்.ஆரம்பத்தில் இவருடைய முதலீடுகள் பெற்றோலியம் ரியல் எஸ்டேட் போன்றவற்றில்  இருந்தது 1954-ஆம் ஆண்டு தன்னுடைய ஆசிரியராக இருந்த பெஞ்சமின் கிரகம் அவர்களுடைய பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருடைய ஆண்டு வருமானம் 12000  அமெரிக்கன் டாலர் எப்போதும் பெஞ்சமின் மற்றும்  வாரன் பஃபெட்  இடையே பங்குச் சந்தை சார்ந்த விஷயங்களில்  ஒரு முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். 

உலக பணக்காரர் பட்டியலில்:-

1956ஆம் ஆண்டு வாரன்  அவர்கள் பபெட் பெர்னாட்ஷாவின் என்ற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்தை தொடங்கினார். பங்குச்சந்தையில் இவருடைய நுணுக்கங்கள் , முதலீட்டு முறைகள் இது எல்லாமே இவருக்கு  வருமானத்தை மிகப்பெரிய அளவில்   அதிகப்படுத்தியது. 1957 ஆண்டு முடிவில் வாரன் பபெட் அவர்களிடம்  மூன்று கூட்டு நிறுவனங்கள் இருந்தனா. 1960இல் அது  7 நிறுவனங்கள்ஆகியது. இதற்கு பிறகு தன்னுடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரே நிறுவனமாக  மாற்றிக்கொண்டார் .   பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்த இவர் 1962 இல் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தார்  2006-ம் ஆண்டு தன்னுடைய பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் 83%  மைக்ரோசாப்ட் தொண்டு நிறுவனமான  மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைகு  கொடுத்தார். Warren Buffett books tamil

கொடைவள்ளல்:-

உலக வரலாற்றில் அதிக பணத்தை தானம் கொடுத்த பெயரை இவர் பெற்றார். தான் ஒரு கோடீஸ்வரர் என்பதை மறந்து இன்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.   2020 ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இவருடைய சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர். இவரின் வெற்றிக்கு  விடாமுயற்சி தன்னம்பிக்கை போன்றவையே காரணம் என்று கூறலாம்.  

இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்களும் படித்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து பயன்பெறுங்கள் .உங்கள் கருத்துக்களை  Comment  செய்யவும் .


நன்றி !

You may like these posts

.Amazon Prime Music bounty
;